சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூராக இருந்த மற்றொரு சுவரையும் இடிக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு உள்ளாக 2 சுவர்கள் இடிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்திலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கான பேருந்துநிலையம் கட்டப்பட்டது. மருத்துவ வசதி, வாகன நிறுத்துமிடம் என அதிநவீன வசதிகளுடன் சுமார் 393 கோடி ரூபாயில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.
ஆனால் தென் மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல், கூடுவாஞ்சேரி, வண்டலூர் பகுதிகளில் நிறுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் சேகர் பாபு, மக்கள் பயன்பாட்டிற்கு வந்து 48 மணி நேரம் தான் ஆகிறது. அங்குள்ள குறைகள் 2-3 நாட்களில் சரிச்செய்யப்படும் என்றார்.