முன்னோர்கள் செய்த #கர்ம_வினை ஜாதகரை பாதிப்பது ஏன்?…
எல்லோரிடமும் மனதில் தோன்றக்கூடியது எண்ணம் “முன்னோர்கள் செய்த தவறுக்கு நான் ஏன் தண்டனை பெற வேண்டும்” என்ற கேள்வி அனைவரது மனதிலும் வினாவாக கூடிய ஒன்றாகும்.
கர்மம் என்பது தொழில், கர்ம வினை நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் நன்மை தீமை என பிரித்து நமது வினை பயனை முடிவு செய்து ஜாதகரை ஆட்டிப்படைக்க செய்யக்கூடிய காலமே கர்ம வினை ஆகும்.
ஒருவர் கர்ம வினையால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் செய்யும் நன்மை காரியங்களும், செயல்களும் கர்ம வினை விளக்கக்கூடிய தன்மை ஜாதகருக்கு இயல்பாகவே கிடைத்துவிடும்.
பொதுவாக முன்னோர்கள் செய்யும் கர்ம வினைக்காக நாம் கஷ்டங்களையும் துக்கங்களையும் அனுபவிப்பது இல்லை. நாம் முன் ஜென்மத்தில் என்ன செய்தோமோ… அதுவே இப்பிறவியில் நாம் ஒரு குடும்பத்தில் பிறந்து அந்த குடும்பத்தின் சூழலையில் அனுபவிக்கிறோம்.
உதாரணத்திற்கு முன் ஜென்மத்தில் உறவுகளையோ, உற்றார்களையோ, மனைவியோ, சகோதர சகோதரிகளையோ, நட்பு வட்டாரங்களிலோ, விலங்குகளையோ, தாவரங்களையோ, மண்ணையோ போன்ற ஏதோ ஒரு அலட்சிய செயல்களால் தீவினை செய்து பலன் அடைந்தவர்கள் இப்பிறவியில் அனைத்தையும் ஏங்கி தவிக்கும் சூழ்நிலை தருவதை கர்ம வினை பலனாகும்.
நாம் செய்தது சிறிதளவு தீங்காக இருந்தாலும் அதனை முற்றிலும் அனுபவித்து தீர வேண்டும் என்பதே கர்மா என்று சொல்கிறது.(கருட புராண நூல்)
முன்னோர்களுக்கு செய்யும் தர்ப்பணங்களும், திதி வழிபாடும் நாம் முன் ஜென்மத்தில் செய்த கர்மவினையும், இப்பிறவியில் செய்யும் கர்மவினையும் ஏற்றுக்கொண்டு சூரியனிடம் தமது பிரார்த்தனையை செய்து விமோசனம் பெற்றுக் கொள்கிறோம்.
ஒருவன் புகழ் உச்சியில் இருந்தாலும் அல்லது மிக வறுமையில் இருந்தாலும் அவன் செய்யும் சிறு காரியங்களாக இருந்தாலும் அவை கர்மாவாக ஜாதகருக்கு எமதர்மன் சொல்ல சித்திரகுப்தர் கணக்கு எழுதி வைத்து. அதனை சரி பார்ப்பது, ஒவ்வொன்றையும் நன்மை தீமை என பட்டியலிடுவார்கள்.
இந்த கர்ம வினை பலன் எப்பொழுது ஜாதகருக்கு வெளிப்படுத்த தோன்றும் என்பது சிறுவயதினிலையோ அல்லது நடுத்தர வயதினிலையோ அல்லது முதிய வயதிநிலையோ அனுபவிக்கும் சூழலை தரும்.
கர்மாவை வெளிப்படுத்தும் கிரக திசையான சூரிய திசை, சந்திர திசை, குரு திசை, சனி திசை, ராகு திசை, கேது திசை, சுக்கிர திசை, செவ்வாய் திசை, புதன் திசை காலங்களில் முன் செய்த கர்ம வினைக்கேற்ப பலனை அனுபவிக்க செய்யும்.
இதனையே ஜாதகத்தில் 1-5-9 போன்ற பாவங்களை வைத்து ஜாதகரின் கர்மாவை கணக்கிடுகிறார்கள் ஜோதிடர்கள்…
இவை, 3-ம் பழுதுபட்டாலே, ஜாதகர் வாழ்வில் சிரமங்களையும், கஷ்டங்களையும் அனுபவிக்கும் சூழ்நிலைகளை இளம் பருவத்திலேயே அடைந்து விடுகிறார்.
இவைகளில் இருந்து விமோசனம் பெறுவதற்கு முடிந்த அளவுக்கு உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு கஷ்ட நேரங்களில் உதவிகள் செய்து வர உங்களது கர்ம வினை நன்மையாக மாறும் என்பதை நான் உறுதிபட கூறுகிறேன்.
இக்காலங்களில் நீங்கள் செய்யும் நன்மைகள் யாவும் உங்களது தலைமுறைகளை காக்கக்கூடிய கவசமாக அமையும் என்பது அடியே அனுபவத்தால் கண்ட உண்மை.
நன்றி!
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
தகவல்.
ஶ்ரீ குமராயி ஜோதிடம்
காரைக்குடி.