Tamilalaram Media
செய்திகள், அரசியல், நடப்பு நிகழ்வுகள், நகர வாழ்க்கை, தமிழ் திரைப்படங்கள், ஆளுமை நேர்காணல்கள், திரைப்பட விமர்சனங்கள், நிகழ்வுகள், வாழ்க்கை முறை, சமூகப் பொறுப்பு & சமூக விழிப்புணர்வு சார்ந்த மிகவும் பிரபலமான ஆன்லைன் ஊடக அமைப்பாகும். “இது தமிழகரம் தமிழ்பேசும் மக்களின் உறவுப்பாலம்”

அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பு.. முந்தைய நாள் மாலையே ரிலீஸ் செய்யும் லியோ தயாரிப்பாளர்..!

109
திரைப்படம்  தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் அதிகாலை காட்சியும் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்ட நிலையில் லியோ படத்திற்கும் அனுமதி இல்லை என்று கூறப்பட்டது .

இதனை அடுத்து விஜய்யின் லியோ தயாரிப்பாளர் லலித் அதிரடி முடிவெடுத்து முந்தைய நாள் மாலை மற்றும் இரவு பிரிமியர் வெளியிட திட்டமிட்டுள்ளார்

தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் 18ஆம் தேதி மாலை மற்றும் இரவு காட்சிகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லியோ படத்திற்கு அதிகாலை சிறப்புக் காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் முன்தினமே பிரிமியர் காட்சி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே தமிழகம் முழுவதும் லியோ திரைப்படம்  18ஆம் தேதி மாலை காட்சி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Leave A Reply

Your email address will not be published.