Tamilalaram Media
செய்திகள், அரசியல், நடப்பு நிகழ்வுகள், நகர வாழ்க்கை, தமிழ் திரைப்படங்கள், ஆளுமை நேர்காணல்கள், திரைப்பட விமர்சனங்கள், நிகழ்வுகள், வாழ்க்கை முறை, சமூகப் பொறுப்பு & சமூக விழிப்புணர்வு சார்ந்த மிகவும் பிரபலமான ஆன்லைன் ஊடக அமைப்பாகும். “இது தமிழகரம் தமிழ்பேசும் மக்களின் உறவுப்பாலம்”

மயில்கள் எங்காவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா?

மயில்கள் எங்காவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா?

1,364

மயில்கள் எங்காவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா?

குரங்கு, நாய், பூனை, எலி, மாடு, காகம் போன்ற விலங்கு / பறவையினங்கள் போல இறந்து கிடக்கும் மயிலை உங்களில் யாரேனும் பார்த்ததுண்டா?

ஏன் நேஷனல் ஜியாகிராஃபி சானலிலாவது பார்த்ததுண்டா? ஆம் எவரும் பார்த்திருக்க முடியாது!

இயற்கையாக வயதாகி இறக்கும் மயில்களின் மரணத்தை எவருமே பார்க்க முடியாதாம்! இறப்பதற்கு மிகச் சரியாக 48 நாட்களுக்கு முன்பே அதற்கு தனது இறப்பு நாள் நேரம் நொடி அனைத்தும் துல்லியமாக தெரிந்துவிடுமாம்! அந்த நொடியில் இருந்து அந்த மயிலானது மலை மீதுள்ள ஏதாவதொரு முருகன் கோவிலில்..

ஒரு மறைவான இடத்தை தேர்ந்தெடுத்து ஒரு வேளை உணவும், சிறிது நீரூம் மட்டுமே அருந்தி “மயில்துயில்” எனும் விரதத்தை கடைபிடிக்குமாம்! கடைசி 1 வாரம் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்துவிடுமாம். அதனுடைய முடிவு காலம் வரும் நாளுக்கு முதல் நாள் மட்டும் ஒரு கோமாதாவின் கோமியத்தை..

7 சொட்டு அருந்துமாம்! அப்போது மயிலின் கண்கள் வேர்த்து 6 சொட்டு கண்ணீர்த் துளிகளை பத்திரமாக ஒரு பாறை பிளவுக்குள் விடுமாம்! அடுத்த நொடியே அந்த பாறை பிளந்து கொள்ள மயில் அதனுள் அமர்ந்து தோகையை விரிக்க பாறை அதை நெருக்க அந்த முழுநாளும் மயில் ஓம் முருகா என்று சொல்லிக் கொண்டே..

தன் உயிரை விடுமாம். தோகை இல்லாத பெண் மயில்கள் தங்கள் கண்ணீரை வேல மரத்தில் விட்டு அது பிளந்ததும் இதே போல அமர்ந்து உயிர் துறக்குமாம்! வெள்ளை நிற மயில்கள் மட்டும் அக்கோவிலிலுள்ள வேலவன் கையில் இருக்கும் வேலில் பறந்து வந்து விழுந்து தங்களை மாய்த்துக் கொள்ளுமாம்!

அப்படி வேலில் இறக்கும் மயில்கள் அடுத்த நொடியே செவ்வரளி மலர் மாலையாக மாறி முருகன் காலில் விழுமாம்! இந்த அரிய உண்மைகளை எல்லாம் படிக்கும் போது 48 தினங்கள் = 1 மண்டலம், 7 சொட்டு கோமியம் = ஓம் சரவணபவ ஏழெழுத்து, 6 சொட்டுக் கண்ணீர் = அறுபடைவீடு, செவ்வரளி = முருகனின் பூ,

வேல மரம் = வேலுண்டு வினையில்லை, வேலில் மரணம் = யாமிருக்க பயமேன் என்பதை உணர்த்துகிறது அல்லவா! அதனால் தான் தெய்வ அம்சம் பொருந்திய மயில் முருகனுக்கு வாகனமாக மட்டுமின்றி நம் நாட்டு தேசியப் பறவையாகவும் இருக்கிறது! இப்படி தனது மரணகாலத்தில் கூட மிகவும் அமைதியாக எந்த..

உயிரினங்களுக்கும் இடையூறு செய்யாமல் முருகர் கோவிலேயே நோன்பிருந்து உயிர் துறக்கிறது மயில்கள்! விபத்து மற்றும் வேறு பிற காரணங்களால் அடிபட்டு சாகும் மயில்களை மற்ற மயில்கள் பாம்புப் புற்றின் அருகே இழுத்துச் சென்று விட்டுவிடும்! அந்த சரவணனடி வாழ் சர்ப்பமும் மயில் உடலைப் புற்றுக்குள் தள்ளி..

அந்த உடலை மூடிவிடும்! இது முற்றிலும் உண்மை இது குறித்து ‘மயிலாடுதுறை மயில்சாமி சித்தர்’ எழுதிய “மயில் அகவல்” என்னும் நூலில் இத்தகவல்கள் காணப்படுவதாக விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக கூகுள் தெரிவிக்கிறது! மயில்சாமி சித்தர் உச்சி வெயிலில் பழனி மலையுச்சிக்கு சென்று, அங்கு..

ஒரு மொட்டைப் பாறையில் தனது ஒற்றைக் காலில் நின்று கடும் தவமிருந்து முருகனிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்ட வரங்களில் மயில்கள் தாங்கள் இறக்கும் நிலையை அறிந்து நோன்பிருந்து இறக்கவேண்டும். அதன் உடல் பாகங்கள் யார் கண்ணிலும் படக்கூடாது என்பவையாகும்.!!

தோகை விரிக்கும் போது மயில்களுக்கு உடல் சிலிர்ப்பது போல இதைப் படிக்கும் உங்களுக்கும் மெய் சிலிர்க்கிறதல்லவா!

ஓம் முருகா.. முருகா..

மயிலாடுதுறை மயில்சாமி சித்தர் எழுதிய மயில் அகவல் என்னும் நூல் கிடைத்தால் படியுங்கள்…

நன்றிகள் !!!

Leave A Reply

Your email address will not be published.