Tamilalaram Media
செய்திகள், அரசியல், நடப்பு நிகழ்வுகள், நகர வாழ்க்கை, தமிழ் திரைப்படங்கள், ஆளுமை நேர்காணல்கள், திரைப்பட விமர்சனங்கள், நிகழ்வுகள், வாழ்க்கை முறை, சமூகப் பொறுப்பு & சமூக விழிப்புணர்வு சார்ந்த மிகவும் பிரபலமான ஆன்லைன் ஊடக அமைப்பாகும். “இது தமிழகரம் தமிழ்பேசும் மக்களின் உறவுப்பாலம்”

வந்தே பாரத் ஸ்லீப்பர் இப்படித்தான் இருக்குமா?

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. உள்ளே இப்படித்தான் இருக்குமா?

520

சென்னை: வந்தே பாரத் ரயிலின் ஸ்லீப்பர் கோச் வடிவம் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ரயில் உட்புற கிராபிக்ஸ் தோற்றம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

 

இந்தியா முழுக்க வந்தே பாரத் ரயில் சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவை பல்வேறு மாநிலங்களில் அடுத்தடுத்து தொடங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது இயங்கும் வேகமான ரயில்களில் ஒன்றாக வந்தே பாரத் ரயில் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டிலும் வந்தே பாரத் ரயில் பல்வேறு சேவைகளை கொண்டு உள்ளது. தமிழ்நாட்டில் வந்தே பாரத் ரயில் இயக்கம் எங்கெல்லாம் உள்ளது என்று பார்க்கலாம்.

1. சமீபத்தில் திருநெல்வேலி மற்றும் சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் இரண்டு நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை தற்போது 11-12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரத்திற்கும் குறைவாகக் கொண்டு வரும். அதே வேளையில், சென்னை மற்றும் விஜயவாடா இடையே புதிய வந்தே பாரத் நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 6. 40 நிமிடங்கள்.மணிநேரமாகக் குறைக்கும். இந்த ரயில் 8 பெட்டிகளை கொண்டது. ஒரு டிக்கெட் சென்னை டூ திருநெல்வேலி ரூ.1400 முதல் ரூ.1500 வரை இருக்கும். 120- 140 கிமீ வேகத்தில் இந்த ரயில் செல்லும். 660 கிலோ மீட்டர் தூரத்தை சரியாக 8 மணி நேரம் 2 நிமிடத்தில் கடக்கும்.காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை வரும்.

 

2. அதேபோல் விஜயவாடா மற்றும் சென்னை இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு உள்ளது. ரேணிகுண்டா வழியாக இயக்கப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். இது ஆறு மணி 40 நிமிடங்களில் தூரத்தை கடக்கும். : ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல் மற்றும் தெனாலி ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் இருக்க வாய்ப்புள்ளது

3. தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒரு உள் மாநில வந்தே பாரத் சேவை உள்ளது. அதாவது சென்னை – கோவை இடையே உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும். 4. இது போக மாநிலத்திற்கு வெளியே ஒரு வந்தே பாரத் சேவை உள்ளது. சென்னை – பெங்களூர் – மைசூர் வரை உள்ளது.

வந்தே பாரத் படுக்கை ரயில்: வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய ‘வந்தே பாரத்’ ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது வெறும் இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே உள்ளன. நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் மொத்த ரயில்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அங்கே ரயில்கள் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்தது. ல் தற்போது படுக்கை வசதி கொண்ட ரயில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய ‘வந்தே பாரத்’ ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 2024ல் இந்த ரயில் அமலுக்கு வர உள்ளது. இந்த ரயிலின் உட்புற புகைப்படம் வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க வெள்ளையாக நவீன படுக்கையுடன், மிகப்பெரிய ஜன்னலுடன் ஏசி வசதியுடன் இந்த ரயில் உட்புறம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன்று படுக்கை வரிசை கொண்ட பெட்டி, 2 பெட்டி கொண்ட படுக்கை வரிசை என்று இரண்டு விதமான படுக்கை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. உள்ளே டிஜிட்டல் போர்ட் வைக்கப்பட்டு உள்ளது. எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

 

Leave a comment